வயிற்று நோய்களை குணமாக்கும் இஞ்சி சட்னி: சுவையாக செய்வது எப்படி?
இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இஞ்சியை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொண்டோம் என்றால், வாய்வுத் தொல்லை நீங்கும்.
குமட்டல், வாந்தியை தடுக்கும். மேலும், காலையில் இஞ்சி டீயை எடுத்துக் கொண்டால் உடல் எடை கணிசமாக குறையும். செரிமான மண்டலமும் சுத்தமாகும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து குணமடைய எப்படி சுவையாக இஞ்சி சட்னி செய்யலாம் என்று பார்ப்போம் –
தேவையான பொருட்கள்
இஞ்சி – 500 கிராம்
துருவிய தேங்காய் – 4 ஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
வெங்காயம் – 4
புளி – 4
துண்டு வெல்லம் – 2 துண்டு
பச்சை மிளகாய் – 14
காய்ந்த மிளகாய் – 12
கொத்தமல்லி இலை – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப
ginger-healthy-food-recipes
தாளிக்க
சீரகம் – அரை ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பில்லை – தேவைக்கேற்ப
உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன்
பெருங்காய தூள் – 2 சிட்டிகை
எண்ணெய் – 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நறுக்கிய இஞ்சியை அதில் போட்டு நன்றாக வதக்கி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், வெங்காயத்தை போட்டு வதக்கி, அதில் தேங்காய் துருவல், கொத்தமல்லியை சேர்த்து பொன்னிறமாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
வதக்கிய அனைத்து கலவையை நன்றாக ஆற வைத்து, அதை மிக்ஸியில் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து, இஞ்சி கலவையில் கலந்து பரிமாறினால் சுவையான இஞ்சி சட்னி ரெடி.