இலங்கை
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் திருடப்பட்ட தங்க நகைகள்!
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றில் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட் டுள்ளார். வீட்டில் இருந்த 8பவுண் நகைகள் திருடப்பட்டிருந்தன என்ற தகவல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். விசாரணைகளின் அடிப்படையில் நேற்றுமுன்தினம் அதே இடத்தைச் சேர்ந்த 30 வயதான ஒருவரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து தாலிக்கொடி ஒன்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.