இலங்கை
புதுவருடத்தில் இலங்கைக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான தகவல்!
இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று தெரிவித்துள்ளது. இன்றைய தினம் (13.04.2023) ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியின்போதே ஆசிய அபிவிருத்தி வங்கி இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
இதனை ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் உள்நாட்டு இயக்குநர் சென் சென் உறுதிப்படுத்தியுள்ளார். எதிர்காலத்தில் சலுகை நிதியை வழங்குவதன் ஊடாக இலங்கைக்கு ஆதரவை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.