இலங்கை

விடைத்தாள் மதிப்பீட்டு பணியாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

க.பொ.த (உ/த) விடைத்தாள்களை மதிப்பீட்டு செய்வதற்காக செலுத்தப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விசேட அறிவிப்பொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

அதன்படி, விடைத்தாள்களை மதிப்பீட்டு செய்ய நாளொன்றுக்கு வழங்கப்படும் 500 ரூபா பணமானது 2,000 ருபாகவும், 81 கி.மீ.க்கு மேல் இருந்து மதிப்பீடு பணிகளுக்கு வரும் ஆசிரியர்களுக்கு ரூ.2,900 கொடுப்பனவும் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்குறிப்பிட்ட நோக்கத்திற்காக திறைசேரியிடம் இருந்து மேலதிக ஒதுக்கீடுகளும் பெறப்பட்டன.

இதற்கு மேலதிகமாக, பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடனான முதற்கட்ட கலந்துரையாடல் மார்ச் 9ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது, இதில் திறைசேரி அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டனர்.

இது தொடர்பில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 19,000 பேரிடம் இருந்து பரீட்சை மதிப்பீட்டு பணிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன அதில் 12,000 பேர் மாத்திரமே விண்ணப்பித்துள்ளனர்.

Back to top button