இலங்கை

நாட்டு மக்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்; விலைக் குறைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள்

நாடு முழுவதுமுள்ள ச.தொ.ச விற்பனை நிலையத்தினால் 06 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலை குறைப்பு இன்று(28.12.2023) முதல் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன் (425 கிராம்) 55 ரூபாவாலும் , ஒரு கிலோஉருளைக்கிழங்கு 5 ரூபாவாலும் ஒரு கிலோ சிவப்பு பருப்பு 1ரூபாவினாலும் ,வெள்ளை நாடு 1 ரூபாவினாலும் குறைக்கப்பட்ட பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதன்படி டின் மீன்(425 கிராம்) புதிய விலை 475.00 ஆகவும் ஒரு கிலோ உருளைக்கிழங்கின் புதிய விலை280.00 ஆகவும் ஒரு கிலோ சிவப்பு பருப்பின் புதிய விலை 309.00 ஆகவும் விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button