இலங்கை

இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்க அரசு நடவடிக்கை: எழுந்துள்ள குற்றச்சாட்டு

மறுசீரமைப்பு என்ற பெயரில் அரசாங்கம் மின்சார சபை தனியார் மயமாக்க முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், மின்சாரத்துறையை தனியார் மயமாக்குவது இடம்பெறும் ஊழல் மோசடிகளுக்கு தீர்வாக அமையப்போவதில்லை என்றும் ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இக்குறித்த விடயம் தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், மின்சாரத்துறை மறுசீரமைப்பு செய்வதை வரவேற்கிறோம். ஆனால் மறுசீரமைப்பு என்ற பெயரில் அரசாங்கம் மின்சார சபையை தனியார் மயமாக்கவே நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தனியார்மயமாக்கல் பிரச்சினைக்கு தீர்வு அல்ல. மின்சாரத்துறையில் தற்போதும் பாரியளவில் மாபியாக்கள் இடம்பெற்று வருகின்றன. அத்துடன் வலுசக்தி நாட்டுக்கு மிகவும் அவசியமானதாகும். அதனால் நல்ல சேவை ஒன்றை வழங்குவதற்காக இந்த துறைகளில் மறுசீரமைப்பு மேற்கொள்வது அவசியமானதாகும் என வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Back to top button