இலங்கை

அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் சிக்கல்

அரச நிறுவனங்களின் சாதாரண பணியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத அதிகாரிகளுக்கு தனித்தனியாக இருவேறு சந்தர்ப்பங்களில் சம்பளம் வழங்க திறைசேரி தீர்மானித்துள்ளது.

நாட்டின் நிதி நெருக்கடியை கருத்திற்கொண்டு திறைசேரி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், திறைசேரியிலிருந்து பணம் நிதியை விடுவிப்பதற்குத் தேவையான சாதாரண பணியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத அதிகாரிகளின் சம்பளப் பணச் சீட்டுகள் உள்ளிட்ட தகவல்களை சமர்ப்பிக்குமாறு அரசு நிறுவனங்களின் தலைமை  நிதி அதிகாரி, கணக்காளர், இயக்குநர் (நிதி) அதிகாரிகளுக்கு திறைசேரி கடிதம் மூலம் பணிப்புரை விடுத்துள்ளது.

பணியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத அதிகாரிகளுக்கு தனித்தனியாக ஊதியம் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறைசேரி செயற்பாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.சி.டி.எல்.சில்வா மற்றும் திறைசேரி பிரதிச் செயலாளர் ஏ.கே.செனவிரத்ன ஆகியோரின் கையொப்பத்துடன் கடந்த (13) இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Back to top button