உடல்நலம்

அடர்த்தியாக முடி வளர உதவும் திராட்சை எண்ணெய் : எப்படி யூஸ் பண்ணலாம்?

திராட்சை விதை எண்ணெய் இயற்கை எண்ணெய்களில் ஒன்றாகும். எண்ணெய் ஊட்டச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் கொழுப்புகளால் நிரம்பியுள்ளது எனலாம். இது முடி மற்றும் தோல் இரண்டிற்கும் சிறந்தது. திராட்சை விதை எண்ணெய் முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், உச்சந்தலையை ஊட்டமளிக்கவும் உதவும். பெரும்பாலனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையாக இருப்பது முடி உதிர்வு தான். ஒரு சிலருக்கு முடியானது அதிகமாக வளராது. அப்படியே வளந்தாலும் நீளமாக இருப்பதில்லை.

இதற்கெல்லாம் ஒரெ காரணம் சீரான பராமரிப்பு இல்லை என்பதே. எனவே கொத்து கொத்தாக முடி வளர உதவும் திராட்சை எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம் எனவும் எப்படி தயாரிக்கலாம் எனவும் இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

திராட்சை எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்து
திராட்சை விதை எண்ணெயில் வைட்டமின் ஈ போன்ற ஆரோக்கியமான கூறுகள் மற்றும் லினோலிக் அமிலம் போன்ற முக்கிய கொழுப்புகள் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் முடியை வளர்க்கவும், வளர்ச்சியைத் தூண்டவும் உதவும்.

திராட்சை விதை எண்ணெயின் நன்மைகள்
பொடுகை எதிரித்து போராடும்.

முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

முடி வேர்களை வலுப்படுத்தும்.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.​

காயங்கள் ஆற உதவுகிறது.

பயன்படுத்துவது எப்படி ?
சூடாக்கி பயன்படுத்தினால் அதிக பலன் கிடைக்கும். இதனுடன் கலந்து உபயோகிக்க லெவண்டர் மற்றும் டீ ட்ரீ ஆயில் இரண்டும் நல்ல கலவையாகும். இந்த எண்ணெய்யை தலையில் இட்டு குறைந்தது 2 நிமிடங்களாவது மசாஜ் செய்ய வேண்டும். அரைமணி நேரம் தலையில் ஊற விட்டு, தலைமுடியை கழுவி விட வேண்டும்.

Back to top button