உடல்நலம்

எடை இழப்பு மற்றும் கொலஸ்ட்ரால் என்பவற்றுக்கு தீர்வு சொல்லும் பச்சை பயறு…!

சமையலுக்காக பல்வேறு வகையான பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் பச்சை பயறும் உள்ளது.

பலவித நன்மைகளை அளிக்கக்கூடியப் பச்சைப்பயற்றினை முங் பீன்ஸ் அல்லது கிரீன் கிராம் என்றும் கூறுவார்கள். சுவையான ஸ்னாக்ஸ் முதல் சத்தான உணவுகள் மற்றும் சாலட்ஸ்கள் என பல உணவுகளை தாயரிப்பதில் பச்சை பயிறு முக்கிய பங்கு வகிக்கிறது.

அதுமட்டுமல்லாது ப்ரோடீன், ஃபைபர் உள்ளிட்ட பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பருப்பு வகைகளில் ஒன்றாக பச்சை பயிறும் இருக்கிறது.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியத்திற்கு நன்மைகளை வழங்கும் ஃபைபர் மற்றும் பொட்டாசியம் ஆகிய இரண்டு முக்கிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாக பச்சை பயிறு இருக்கிறது. ஃபைபர் சத்து கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.

அதே சமயம் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தவிர இந்த பருப்பில் கொழுப்பு மற்றும் சோடியம் குறைவாக உள்ளது. இதன் காரணமாக இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற பருப்பாக பச்சை பயிறு இருக்கிறது.

எடையை குறைக்க

பச்சை பயறில் ப்ரோட்டீன் மற்றும் ஃபைபர் அதிகம் இருக்கிறது. இவை இரண்டுமே எடை இழப்புக்கு உதவும் குறிப்பிடத்தகுந்த ஊட்டச்சத்துக்களாகும். இதிலிருக்கும் ப்ரோட்டீன் Muscle Mass-ஐ உருவாக்க மற்றும் பராமரிக்க உதவுகிறது.

அதே நேரம் இதிலிருக்கும் ஃபைபர் நீங்கள் சாப்பிட்ட பின் நிறைவாக, திருப்தியாக உணர உதவுகிறது. தவிர இதில் கலாரிகள் குறைவு என்பதால் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக பச்சை பயிறு இருக்கிறது.

செரிமானம் மேம்படும்

சிறந்த செரிமானத்திற்கு ஃபைபர் அவசியம், அது இந்த பருப்பில் இருப்பதால் செரிமான அமைப்பு சீராக இயங்க உதவி மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது. செரிமான அமைப்பு தவிர குடல் ஆரோக்கியத்திற்கும் இந்த பருப்பு சிறந்தது.

தவிர ப்ரீபயாடிக்ஸ்களின் சிறந்த மூலமாக இருக்கிறது. இது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை ஆதரிக்கும் ஒரு வகை ஃபைபர் ஆகும்.

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்

பச்சை பயிறு லோ கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்டது என்பதால், இதனை சாப்பிட்ட பின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரிக்காது. எனவே இது நீரிழிவு நிலை அல்லது ப்ரீடயாபட்டீஸ் உள்ளவர்களுக்கு சிறந்த உணவு தேர்வாக இருக்கும்.

பசை பயிறு-ல் நிறைந்திருக்கும் நார்ச்சத்து ரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை மெதுவாக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு தேவையான முக்கியமான மினரல்ஸ்களான ஜிங்க் மற்றும் இரும்பு பச்சை பயறில் அதிகம் காணப்படுகின்றன.

இதிலிருக்கும் Zinc-ஆனது தொற்றுநோயை எதிர்த்து போராடும் வெள்ளை ரத்த அணுக்களை உருவாக்க உதவுகிறது. அதே நேரம் உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல இதிலிருக்கும் இரும்பு சத்து உதவுகிறது.

மேலும் இரும்பு சத்தானது நோயெதிர்ப்பு மண்டலத்தின் சரியான செயல்பாட்டிற்கு அவசியமான ஒன்றாகும்.

சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியம்

நமது சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாக இருக்க இந்த பச்சை பயறில் இருக்கும் ப்ரோட்டீன் பெரிதும் உதவுகிறது. ப்ரோட்டீனானது சருமம் மற்றும் முடி செல்களை உருவாக்க மற்றும் அதன் சேதத்தை சரி செய்ய உதவுகிறது.

மேலும் இந்த பருப்பு biotin-ன் ஒரு நல்ல மூலமாகவும் இருக்கிறது. இது முடி வளர்ச்சிக்கு தேவையான முக்கிய வைட்டமின் ஆகும்

Back to top button