உடல்நலம்

உடனே செரிமான பிரச்சினையை போக்கும் பச்சை புளிரசம்… 10 நிமிடத்தில் செய்யலாம்

பொதுவாகவே அனைவருக்கும் விதவிதமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது அடிப்படை ஆசையாக இருக்கும். இந்த உலகில் அனைவரும் உழைப்பதற்கு அடிப்படை காரணமே உணவு தான். அப்படி ஆசையில் எல்லாவற்றையும் சாப்பிட்ட பிறகு ஏன் சாப்பிட்டோம் என தோன்றும் அளவுக்கு அவதிப்படுபவர்களும் அதிகம். இதை உணர்ந்து தான் திருவள்ளுவர் உண்பதை காட்டிலும் செரிப்பது சுகம் தரும் என கூறியுள்ளார். இது போன்று நம்மில் பலரும் அதிகமா சாப்பிட்டு அசையவே முடியாமல் அப்பப்போ சிரமப்படுவார்கள். இப்படியான நேரங்களில் ரொம்பவே இலகுவான முறையில் செறிமான பிரச்சினையை சீர் செய்யும் பச்சை புளி ரசம் எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்கலாம்.

தேவையான பொருட்கள்

புளி- தேவையான அளவு

சீரகம்- 1 தேக்கரண்டி

மிளகு- 1/2 தேக்கரண்டி

பூண்டு- 3

சின்ன வெங்காயம்- 10

கறிவேப்பிலை, கொத்தமல்லி- தேவையான அளவு

உப்பு- தேவையான அளவு

செய்முறை

புளியை ஊறவைத்து தேவையான அளவு கரைசல் தயார் செய்து கொள்ளவும்.

அதற்கு பிறகு ஒரு சிறிய உரல் ஒன்றில் சீரகம், மிளகு, பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக இடித்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் இடித்த கலவையை ஏற்கனவே தயார் செய்த புளிக்கரைசலில் சேர்த்தால் பச்சை புளி ரசம் ரெடி. சாதத்துடன் இந்த ரசத்தை சேர்த்து சாப்பிட்டால் செரிமான கோளாறுகளுக்கு உடனடியாக தீர்வு கொடுக்கும்.

Back to top button