ஏனையவை

நாவூறும் சுவையில் குலாப் ஜாமுன் ரெடி!

சுவையான குலாப் ஜாமுன்னுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை! அதை செய்வதற்கு கோதுமை மா ஒரு முக்கிய மூலப்பொருளாகும். இதை வீட்டிலேயே எளிதாக தயாரித்துக்கொள்ளலாம். பால் பவுடரில் இருந்து தயாரிக்கப்படும் குலாப் ஜாமூனுக்கும் மாவிலிருந்து தயாரிக்கப்படும் குலாப் ஜாமூனுக்கும் வேறுபாடு இருகின்றது. ஆகவே வீட்டில் இருந்துக்கொன்டே எவ்வாறு சுவையான கோதுமை மா குலாப் ஜாமூனு செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கோதுமை மா – 1/2 கப்

பால் பவுடர் – 1/2 கப்

பேக்கிங் சோடா – 1/2 தே.கரண்டி

நெய் – 1 தே.கரண்டி

பால் – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

சர்க்கரை – 1 1/2 கப்

தண்ணீர் – 02 கப் ஏலக்காய்

செய்முறை

முதலில் கோதுமை மா, பால் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதனுடன் நெய் மற்றும் தேவையானளவு பால் சேர்த்து பினைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்த மாவை பொறித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இறுதியான ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் மற்றும் ஏலக்காய் சேர்த்து சர்க்கரை பாகு தயார் செய்ய வேண்டும். கொதித்துக்கொண்டிருக்கும் வேளையில் பொறித்துவைத்ததை சேர்க்க வேண்டும். 5 நிமிடமாவது ஊற விட்டு எடுக்க வேண்டும். அடுப்பில் இருந்து இறக்கி அதை 5 அல்லது 6 மணிநேரமாவது சர்க்கரை பாகுவில் ஊற விட்டு பின் எடுத்தால், சுவையான குலாப் ஜாமூனு ரெடி!

Back to top button