முடி கொத்து கொத்தாக கொட்டுகிறதா? கவலை வேண்டாம்- இதோ பாட்டி வைத்தியம்
இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் முடி உதிர்தல் பிரச்சினை மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக சிலருக்கு முடி கொட்ட ஆரம்பிக்கும். தைராய்டு பிரச்சினை இருந்தாலும் முடி உதிரும். மேலும், தலை குளிக்கும்போது தண்ணீரை மாற்றி, மாற்றி பயன்படுத்திலோ, உப்பு கலந்த நீர் மற்றும் ஷாம்பூவை மாற்றி பயன்படுத்தினாலோ முடி உதிரும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் வேப்பிலையை போட்டு நன்றாக கொதிக்க விட்டு அந்த தண்ணீரில் தலைமுடியை அலசி வந்தால் முடி உதிர்வை தடுத்து விடலாம். வாரத்திற்கு 3 முறை செம்பருத்தி இலையை நன்றாக அரைத்து அதை தலையில் தடவி, அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் முடி உதிராது. முடி செழித்து வளரும். hair-growth-tips முடி உதிர்வை தடுக்க, தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் மூன்றையும் சம அளவாக எடுத்து, தலையில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் தலைமுடி கொட்டுவது படிப்படியாக நின்று விடும். முடி உதிர்வை தடுக்க, சின்ன வெங்காயத்தை அரைத்து தலையில் தடவி ஊற வைத்து குளித்து வந்தால் முடி கொட்டுவது குறையும். ஒரு பாத்திரத்தில் வெந்தயத்தை ஊற வைத்து அந்ததண்ணீரை கொண்டு தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது. தினமும் பாதாம் எண்ணெய்யை தலையில் நன்றாக தேய்த்து வந்தால் முடி உதிர்வு குறையும். கற்றாழை ஜெல்லை எடுத்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். நெல்லிக்காய் சாற்றை தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால் முடி செழித்து வளரும். மருதாணியில் நெல்லிக்காய் ஜூஸை கலந்து இரவில் தலையில் தடவி, மறுநாள் குளித்து வந்தால் முடி இயற்கையாக கருப்பு நிறமாக மாறும். முடி உதிர்வும் குறையும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தடவி குளித்து வந்தால், முடி அடர்த்தியாக வளரும்.