இலங்கை

மீண்டும் எரிவாயுவின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!

நாட்டில் மீண்டும் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார். அடுத்த மாதம் இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இவ்வாறு லிட்ரோ சமையல் எரிவாயு தொடர்ச்சியாக விலை குறைக்கப்படும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்னும் இம்முறை விலை எவ்வளவு குறைக்கப்படும் என்ற விபரத்தை இப்போதே குறிப்பிட முடியாது என்றும் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை இம்மாதம் 4ஆம் திகதி லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயு விலைகளை திருத்தியிருந்தது. இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 3,186 ரூபா என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 181 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 1,281 ரூபாவாகவும், 2.3 கிலோகிராம் எடையுள்ள எரிவாயுவின் விலை 19 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 598 ரூபாவாகவும் பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Back to top button