புதிய மின்கட்டணம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்! – திருத்த விலைகள் இதோ
இன்று (24) நாடாளுமன்றத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மின் கட்டண திருத்தத்தின் விலையை அமைச்சர் சமர்பித்துள்ளார். இதன்படி தற்போதுள்ள அலகு 0-30 இற்கு 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய அலகின் விலை ரூ.25 ஆக திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது. இதேவேளை நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை 400 ரூபாவிலிருந்து 250 ரூபாவாக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதன்படி மின்சாரக் கட்டணத்தில் முதலாம் பிரிவினருக்கு குறைந்த பட்சம் 23% சலுகை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ளும் குடும்பங்கள் 1,744,000 எனத் தெரிவித்தார்.
அத்துடன், 31-60 அலகுகளுக்கு 9% மற்றும் 0-60 அலகுகளுக்கு 7% மின் கட்டணம் குறைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இதன்படி, 0-30 அலகுகள் பயன்படுத்தும் 15,646 மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணம் ஜூலை மாதத்தில் 23% குறைக்கப்படும் என்றும், 31-60 அலகுகளைப் பயன்படுத்தும் 10,692 மத வழிபாட்டுத் தலங்களுக்கு 7% மின் கட்டணத்தைக் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். ஹோட்டல் பிரிவினருக்கு குறைந்தபட்சம் 9% மின்சார கட்டணம் குறைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.