இலங்கை

காரைக்கால் மற்றும் யாழ்ப்பாணத்துக்கு இடையிலான கப்பல் சேவை தொடர்பில் மகிழ்ச்சி தகவல்!

தென்னிந்தியாவுக்கும் இலங்கையைச் சேர்ந்த ஹேலீஸ் நிறுவனத்துக்கு காங்கேசன்துறைக்கும் இடையிலான சரக்குக் கப்பல் சேவையை நடத்துவதற்கான அனுமதி கிடைத்துள்ளது.

அத்துடன் இச்சேவையை எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நடத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காரைக்கால் – கே.கே.எஸ். இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை ஆரம்பிப்பதில் இழுபறி நீடித்து வருகின்றது. இதன்போது இந்தியத் தரப்பிலிருந்தே அதற்கான அனுமதிகள் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை என்று அறியமுடிகின்றது. இதற்கிடையில் பாண்டிச்சேரியிலிருந்து காங்கேசன் துறைக்கான சரக்குக் கப்பல் சேவையை எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நடத்துவதற்கான அனுமதி ஹேலீஸ் நிறுவனத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button