இலங்கை

மீண்டும் வேலை நிறுத்தத்தில் குதிக்கும் சுகாதார ஊழியர்கள்

தமது பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படாவிட்டால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. சுகாதார ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி இலங்கை திரும்பியவுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என அறிவித்த போதிலும் இதுவரையில் நடைபெறவில்லை என சுகாதார ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக கொழும்பை சூழவுள்ள வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்றைய தினம் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

Back to top button