உடலிற்கு ஆரோக்கியமான மொறுமொறுப்பான ராகி மசாலா தோசை… சுலபமாக செய்வது எப்படி?
எமது உடலிற்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் சத்துள்ள தானியங்களில் ஒன்று தான் ராகி. இவை உடலுக்கு வலு சேர்ப்பதுடன், ஆரோக்கியத்தையும் அளிக்கின்றது. தற்போது ராகியில் சுவையான மசாலா தோசை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையானவை:
அரிசி மாவு – 1/4 கிலோ
ராகி மாவு – 1/4 கிலோ
உருளைக்கிழங்கு – 1
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3
கரம் மசாலா – சிறிதளவு
கடுகு – 1 டீஸ் ஸ்பூன்
இஞ்சி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் ராகி மாவையும், அரிசி மாவையும் சம அளவில் எடுத்துக் கொண்டு, அதனை தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
கடாய் ஒன்றில் எண்ணெய் விட்டு கடுகு, இஞ்சி, பச்சை மிளகாய்
கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்துக் கொண்டு, பின்பு வேக வைத்த உருளைக் கிழங்கை மசித்து சேர்த்து கொள்ளவும்.
தொடர்ந்து இதனுடன் கரம் மசாலா, உப்பு இவற்றினை சேர்த்து நன்றாக கிளறி மசாலா தயாரித்துக் கொள்ளவும். பின்பு தோசைக்கல்லில் எண்ணெய் தடவி தோவை ஊற்றி ய பின்பு உருளைக் கிழங்கு மசாலாவை தடவி மடித்துவிடவும்.
தற்போது சுவையான ராகி மசாலா தோசை தயார்.