உடல்நலம்

முதுகு வலியிலிருந்து நிவாரணம் பெற ஆரோக்கியமான பானம்

பொதுவாக, இளம் தலைமுறைகள் முதல் வயதானவர்கள் வரை வேலைகாரணமாக அல்லது வயது முதிர்ச்சி காரணமாக முதுகு வலி ஏற்படுகிறது. இந்த முதுகு வலிக்கு எத்தனையோ மாத்திரை மருந்துகள் இருக்கின்றன. முதுகு வலியை வீட்டிலேயே இயற்கைமுறையில் எப்படி குணப்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

இந்த முதுகுவலியை போக்க வீட்டிலேயே ஆரோக்கியமான பானம் ஒன்றை தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்

சாதம் வடித்த தண்ணீர்-1 டம்ளர்
தேன் -1 டீஸ்பூன்
சீரகம் -1 டீஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் சாதம் வடித்த தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.

பின் அதை ஒரு டம்ளரில் ஊற்றி அதில் 1 டீஸ்பூன் அளவில் தேன் ஊற்றி கலக்க வேண்டும்.

பின் அதில் எடுத்து வைத்திருந்த 1 டீஸ்பூன் சீரகம் சேர்க்க வேண்டும்.

இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர முதுகு வலி பிரச்சனை விரைவில் குணமாகும். சாதம் வடித்த தண்ணீரில் பல்வேறுவகையான சத்துக்கள் நிரம்பி இருக்கின்றது

Back to top button