ஏனையவை

பொடுகு தொல்லையிலிருந்து விடுபட மருதாணி இருந்தால் போதும்… வந்த இடம் தெரியாமல் போயிடுமாம்!

பொதுவாகவே பெண்கள் பல பிரச்சினைகளை எதிர் கொள்வார்கள். அதில் ஒன்று தான் பொடுகு. இதனால் பலரும் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த பொடுகானது ஏன் ஏற்படுகின்றது இதை எப்படி விரட்டுவது என்று தெரியாமல் பலரும் குழப்புவது வழக்கம்.

ஆகவே வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து எப்படி தலையில் உள்ள பொடுகை விரட்டலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
பொடுகு வரக்காரணம் என்ன?

வானிலை மாற்றம்

ஹார்மோன் மாற்றங்கள்

முடியை சுத்தம் செய்யாமல் இருப்பது

ஈரமான முடியை கட்டாமல் இருப்பது

வரட்சியான சருமத்தினால் வரும்

அழுக்கு தலையுடன் இருப்பது

ஒழுங்காக தினசரி குளிப்பதில்லை

நுண்ணியிர் கிருமியினாலும் பொடுகு வரலாம்

மனஅழுத்தம், கவலையாலும் இது வரலாம்

இதை தடுப்பதாக இருக்கும் ஒரே மருந்து என்றால் மருதாணி எனவும் சொல்லலாம். மருதாணி பல ஆண்டுகளாக நன்மை பயக்கும் பொருளாக உள்ளது. இந்த மருதாணி ஹேர் பெக் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

மருதாணி எலுமிச்சை தயிர் பேக்

மருதாணி தூள் – 4 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – தேவைக்கு

தயிர் – தேவைக்கேற்ப

  1. மருதாணி பொடியை எலுமிச்சை சாறுடன் கலந்து தயிரை சேர்க்கவும்.
  2. அதை கலந்து பேஸ்ட் பதத்திற்கு எடுக்கவும்.
  3. பின் முடியின் வேர் முதல் நுனி வரை தடவி 30 நிமிடங்கள் வரை வைத்து கழுவவும்.
    மருதாணி ஆலிவ் மற்றும் வெந்தய ஹேர் பேக் மருதாணி தூள் – 4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் – தேவைக்கு வெள்ளை வினிகர் – தேவைக்கு வெந்தயம் பொடி – 1 டீஸ்பூன் தயிர் – 2 டீஸ்பூன்
  4. இந்த அனைத்து பொருட்களையும் சேர்த்து குறைந்தது 12 மணி நேரம் வரை ஊறவைக்கவும்.
  5. ஒரு இரவு வரை ஊற வைத்து, மறுநாள் வேர் முதல் முடியின் நுனி வரை உச்சந்தலையில் தடவி 2-3 மணி நேரம் விட்டு கழுவவும்.
    மருதாணி முட்டை பேக் மருதாணி பவுடர் – 3 டீஸ்பூன் தண்ணீர் – தேவைக்கு ஆலிவ் எண்ணெய் – 1 டீஸ்பூன் முட்டை வெள்ளைக்கரு – 2
  6. அனைத்தையும் கலந்து கட்டிகள் இல்லாமல் மென்மையான பேஸ்ட்டாக உருவாக்கவும்.
  7. வேர்கள் முதல் முடியின் நுனி வரை உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்களுக்கு ஊற வைத்து கழுவவும்.
    மருதாணி உடன் கடுகு எண்ணெய் கடுகு எண்ணெய் – 250 மில்லி மருதாணி இலைகள்- கைப்பிடி வெந்தய இலைகள் – கைப்பிடி
  8. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கொதிக்க வைத்து மருதாணி இலைகள் மற்றும் வெந்தயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை எண்ணெயில் வைத்து எடுக்கவும்.
  9. இறுதியாக முடியில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.

Back to top button