உடல்நலம்

தினமும் கொஞ்சம் பூசணி விதைகள் சேர்ப்பதால் கிடைக்கும் 10 நற்பலன்கள் இதோ

பூசணி விதைகளில் இரும்பு, கால்சியம், பி2, ஃபோலேட் மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. பூசணி விதைகளில் அதிக அளவு கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது ஆரோக்கியமான இரத்த நாளங்களை பராமரிக்க உதவுகிறது மற்றும் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.

தினமும் கொஞ்சம் பூசணி விதைகளை சேர்த்துக்கொள்வதால் நம் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் வந்தடைகின்றன. அதில் உள்ள 10 நன்மைகளை பற்றி பார்க்கலாம். பூசணி விதைகளை நொறுக்கு தீனியாகவோ, சாலடில் சேர்த்தோ அல்லது ஓட்ஸ், தயிர் போன்றவற்றின் மேலே தூவியும் உண்ணலாம்.

கிடைக்கும் நன்மைகள்
பூசணி விதையில் இயற்கையாகவே ட்ரைப்டோபான் என்ற அமினோ ஆசிட் உள்ளது. மெலடோனின் மற்றும் செராடோனின் சேர்க்கைக்கும் இது மிகவும் அவசியமாகும். நல்ல தூக்கத்தை வரவழைக்கும்.

பூசணி விதையில் உள்ள துத்தநாகம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு செல்கள் முறையாக செயல்படுவதற்கு உடலில் போதுமான அளவு துத்தநாகம் அவசியமாகும்.

பூசணி விதையில் உள்ள பொட்டாசியம் மற்றும் மாக்னீசியம் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய நலனையும் இதயத்தின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.

இதில் உள்ள மெக்னீசியம், துத்தநாகம், இரும்புசத்து, காப்பர் போன்ற பல ஊட்டச்சத்துகள் உள்ளது. மேலும் இதில் நமக்கு அரோக்கியத்தை தரும் கொழுப்பும் புரதமும் உள்ளது.

பூசணி விதையில் உள்ள மெக்னீசியம் மனநிலையை மகிழ்ச்சியாக்க உதவுவதோடு மன அழுத்த அறிகுறிகளை குறைக்கவும் உதவுகிறது. மேலும் நரம்பியல் கடத்திகளுக்கு உதவுகிறது.


பூசணி விதைகளில் உள்ள துத்தநாகம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்றவை எலும்புகளை வலுப்படுத்த உதவுவதோடு எலும்புப்புரை நோய் ஏற்படாமலும் தடுக்கிறது.

பூசணி விதைகளில் உள்ள நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு செரிமானத்தை அதிகப்படுத்துகிறது. இதன் காரணமாக எளிதாக மலம் கழிக்க முடிகிறது.

மேலும் இதில் உள்ள வைட்டமின்-இ, கரோடீனாய்ட் போன்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைப்பதோடு ஃப்ரீ ரேடிகல்ஸுக்கு எதிராக உடலை போராட வைக்கிறது.

பூசணி விதையில் உள்ள சில பொருட்கள் ப்ரோஸ்டேட் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்வதாகவும் ப்ரோஸ்டேட் சுரப்பி வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது.

பூசணி விதையில் உள்ள மாக்னீசியம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

Back to top button