குதிகால் வெடிப்பை சரி செய்ய வீட்டு வைத்தியம் இதோ
குளிர்காலம் வந்துவிட்டால் பலருக்கும் குதிகால் வெடிப்பு ஏற்படும். பலர் இதற்கு விலையுயர்ந்த கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதற்கான சிறந்த முடிவுகள் கிடைப்பதில்லை.
இதனால் பலர் தொடர்ந்து கவலையில் உள்ளனர். சில வீட்டு வைத்தியங்கள் மூலம் குதிகால் வெடிப்பை முற்றிலும் மென்மையாக மாற்ற முடியும்.
குதிகால் வெடிப்பு பிரச்சனை பல காரணங்களால் ஏற்படலாம். பாதங்களில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பது, அதிகமான சுடு தண்ணீரில் குளிப்பது, வறண்ட பாதங்களை கவனிக்காமல் இருப்பது போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.
தீர்க்கும் வழிகள்
தண்ணீரை கொதிக்க வைத்து வேப்பிலையை போட்டு நன்றாக கொதிக்க விடவும். வேப்பிலையின் எசென்ஸ் முழுவதும் நீரில் இறங்கி இருக்கும். அதை அப்படியே இறக்கி சூட்டை ஆறவிடவும்.
மிதமான சூட்டில் கால் பொறுக்கும் சூட்டில் இருந்ததும் அகலமான பேஷனில் ஊற்றி கால்களை அதில் நனைத்தபடி வைக்கவும். வெயில் காலம் வந்தாச்சா, இனி பருக்களுக்கு குறையிருக்காது 10 நிமிடங்கள் குறையாமல் கால்கள் வேப்பிலை நீரில் இருக்க வேண்டும்.
அப்போது பொறுமையாக ஸ்க்ரப் பிரஷ் கொண்டு பாதங்களை மென்மையாக தேய்த்து எடுக்கவும். 10 லிருந்து 20 நிமிடங்கள் வரை இரண்டு கால்களையும் பொறுமையாக தேய்த்து எடுத்து பிறகு மெல்லிய சுத்தமான துணியில் பாதங்களை துடைத்து இலேசாக ஆலிவ் ஆயில் போட வேண்டும்.
பாதங்களை சுத்தமாக வைத்திருத்தல்
பாதங்களை சுத்தமாக வைத்திருந்தாலே குதிகால் வெடிப்பு உண்டாவது குறையும். சிறுவயதிலிருந்தே ஆண்கள் பெண்கள் இருவருமே பாதங்களை ஈரப்பதமாக சுத்தமாக வைத்திருந்தால் பாதங்களில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.அழகாகவும் இருக்கும்.
உங்கள் குதிகாலில் வெடிப்பு இருந்தால் அதை போக்கி நீங்களும் உங்கள் பாதத்தை பராமரியுங்கள். நிச்சயம் பாதம் பளிச்சென்று மின்னுவதை பார்க்கலாம்.