உடல்நலம்

தீராத தலைவலியிலிருந்து விடுபட எளிய வீட்டு வைத்தியம் இதோ

இன்று தலைவலி என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சினையாக உள்ளது. கழுத்து அல்லது மேல் முதுகுப் பகுதிகளில் ஏற்படும் வலியையும் தலைவலியாகக் கூறுவது உண்டு. மிகப் பெரும்பாலான தலைவலிகள் தீங்கில்லாதவையே, அந்த வகையில் அதுவாகவே குணமாகக் கூடும். ஒற்றைத் தலைவலி, tension தலைவலி, sinus தலைவலி, cluster தலைவலி என்று பலவகை தலைவலிகள் உள்ளது. அதுமட்டுமின்றி அதற்கான காரணங்கள் என்று பார்த்தல் ஏராளமாக உள்ளது. மன அழுத்தம், விழிக்களைப்பு, உடல்வறட்சி, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல் என்பவை காரணமாக இருக்கும

தீர்வுகள் என்ன?
உடம்பில் நீர்ச்சத்து குறைவானால் தலைவலி ஏற்படலாம். ஆகவே சரியான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஒற்றை தலைவலி அல்லது பொறுக்கமுடியாத தலைவலியாக இருந்தால் கிராம்பு ஒன்றை எடுத்து அடுப்பில் சூடு செய்யவும். அதன்பின்பு சூடு ஆறிய பின்பு கிராம்பை ஒரு துணியில் சுற்றி அதிலிருந்து வெளிவரும் புகையை சுவாசிக்க வேண்டும்.
சுக்கை நன்று அரைத்து பவுடர் செய்து அதை நெற்றியில் பத்து போட்டால் தலைவலி சரியாகிவிடும். இதே போன்று இஞ்சியை வாயில் போட்டு மென்று சாறை சுவைத்தால் தலைவலி சரியாகிவிடும்.

பிளாக் டீயில் 5 புதினா இலைகளை போட்டு கொதிக்க வைத்து அதனை குடித்தாலோ, அல்லது துளசியை போட்டு குடித்தாலோ தலைவலி சரியாகிவிடும்.

அனைத்து நேரத்திலும் சந்தோஷமாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு காரியத்தை நினைத்து யோசித்துக் கொண்டிருந்தாலும் தலைவலி ஏற்படும்.

Back to top button