மலச்சிக்கலை போக்க இதோ சில எளிய வழிகள்!
நாம் பொதுவில் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை தான் மலச்சிக்கல். மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிக மிக அவசியமானதாகும். வேறு சில உடல் நல பிரச்சனைகள், மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவை கூட மலச்சிக்கலுக்கு காரணமாக அமையும். எனவே மலச்சிக்கலை எவ்வாறு சரி செய்வது என்பதற்கான ஐந்து எளிமையான தீர்வுகள் இங்கே உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.
மலச்சிக்கல் இருப்பவர்கள் வெதுவெதுப்பான அல்லது சூடான நீரை காலையில் எழுந்தவுடன் குடித்தால் மலச்சிக்கல்லுக்கு நல்ல நிவாரணமாக அமையும்.
காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் எலுமிச்சையை பிழிந்து அதை குடித்து வந்தால் வயிறு சார்ந்த பிரச்சனைகள் சரியாவதோடு, மலச்சிக்கலுக்கு நிவாரணமாக அமையும்.
மலச்சிக்கலுக்கு உடனடியாக நிவாரணம் பெற நன்றாக பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட்டால் போதும். இது அதிக அளவு நார்சத்து இருக்கிறது; இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைக்கு உடனடி தீர்வாக இருக்கிறது.
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், சூடான காஃபி குடிக்கலாம். செரிமான உறுப்புகளில் இருக்கும் கொழுப்பை கரைத்து மலச்சிக்கலுக்கு நிவாரணமாகவும் இருக்கிறது.
உங்களுடைய வயிற்றுத் தசை பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்க வயிறு சார்ந்த உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்வது மலச்சிக்கலை தடுக்கும்.