உடல்நலம்

உடல் சூட்டை குறைப்பதற்கான சில எளிய வழிகள்

தற்போது வெப்பம் அதிகமாக காணப்படுவதால் உடல் சூடும் அதிகரிக்கின்றது.

இதனால் இதனால் பல அசௌகரியங்களும் பிரச்னைகளும் ஏற்படும்.

பொதுவாக, உடலில் ஏற்படும் பிரச்சினைகள், அதற்கு எடுக்கும் மருந்துகள், வாழ்க்கை முறையில் சரியான அக்கறைமின்மை, மெனோபாஸ், வசிக்கும் சூழல் உள்ளிட்ட பல காரணங்களால் உடலில் சூடு அதிகமாகும்.

எளிய வழிகள்
உடல் சூட்டை குறைப்பதற்கான சில எளிய வழிகளைப் பார்க்கலாம்.

உடல் சூடு இருப்பவர்கள் முதலில் தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். தண்ணீரை எந்த அளவுக்கு எடுத்துக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு உடலில் சூடு குறைவதுடன், இன்னும் பல பிரச்னைகளும் குறையும்.

நல்லெண்ணெய்யை எடுத்து சிறிது நேரம் சூடாக்கிவிட்டு சீரகம் மிளகு இரண்டையும் சேர்த்து விடுமுறை நாட்களில் உடல் முழுவதும் தேய்த்து சுடு நீரில் குளிக்கவும்.

மோரில் சீரகம்,பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, எழுமிச்சை இலை என்பவற்றை போட்டு அரைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்து குடிக்கலாம்.

உணலில் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடவும். விளக்கெண்ணெய் பயன்படுத்தவதாலும் உடல் சூடு குறையும்.

உடல் சூடு பிரச்சினை உள்ளவர்களுக்கு, கண் வலி, கண் எரிச்சல், தலைவலி, போன்ற பிற பிரச்சினைகளும் ஏற்படலாம். அதற்கு சிகிச்சை தேவைப்படும் நிலை ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை நாடவும்.

Back to top button