உடல்நலம்

10 நிமிடத்தில் தலைவலி பறக்க இதோ டிப்ஸ்

பொதுவாக தலைவலியால் பலரும் அவதிப்படுவதுண்டு, அதை எவ்வாறு தீர்த்துக் கொள்வதென்று யாரும் அறியாததே. ஆகவே வெற்றிலையின் மூலம் பற்றுப்போட்டு எப்படி தலைவலியை விரட்டலாம் என்று பார்க்கலாம். முதல் வெற்றிலையின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.

வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளன. வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்களை நீக்கி, உடல் இறுக்கம், குடல் புண்களை குணப்படுத்தும். வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கும். அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டும். தாய்ப்பால் சுரப்பியாகவும் இருக்கின்றது. வாய்நாற்றத்தையும் போக்குகிறது. பற்களை பாதுகாக்கும். வெற்றிலை சாறு குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். ஆண்மை குறைபாடு நீங்கும்.

தேவையான பொருட்கள்

வெற்றிலை, கிராம்பு, ஏலக்காய், ஏலக்காய் பொடி, பால்

செய்முறை 10 வெற்றிலையில் காம்புகளை வெட்டியெடுத்து கொள்ளவும். பின் உரலில் வெட்டி வைத்த காம்புகள் மற்றும் மற்றைய பொருட்களை சேர்த்து அரைக்க வேண்டும். பின் இறுதியாக பால் சேர்த்து அரைக்க வேண்டும்.

பாவிக்கும் முறை அரைத்தெடுத்த கலவையை வெயில்படாமல் காய வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தலைவலியின் போது பாவிக்கும் போது, காய வைத்ததை சற்று பாலுடன் சேர்த்து நெற்றில் பூச வேண்டும். இவ்வாறு செய்தால் தலைவலி நீங்கி விடும்.

Back to top button