ஏனையவை

இதோ தித்திப்பான அன்னாசிப்பழ அல்வா ரெடி!

பொதுவில் பழங்கள் என்றாலே அதில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக காணப்படும். குறிப்பாக அன்னாசிப் பழத்தை எடுத்துக்கொண்டால், அதில் விட்டமின் சி அதிகமாக காணப்படுகிறது. சரி இனி அன்னாசிப் பழத்தில் அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் – அன்னாசிப் பழத்துண்டுகள் – 1 கப், சர்க்கரை – 1 கப் -, நெய் – 3/4 கப், கேசரிப் பவுடர் – 1/4, தேக்கரண்டி பால் – 1 கப், ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி, திராட்சை – 5 , தண்ணீர் – 1/4 க்ளாஸ், உப்பு – 1 சிட்டிகை

செய்முறை – முதலாவதாக அன்னாசிப் பழத்தை துண்டுகளாக நறுக்கி, ஆவியில் வேக வைக்கவும். அது ஆறியதன் பின்னர் அதனுடன் பால் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் அரைத்து வைத்துள்ள அன்னாசிப்பழ விழுது, நெய், ஏலக்காய் பொடி, கேசரி பவுடர், தேவையான அளவு உப்பு, நெய்யில் வறுக்கப்பட்ட திராட்சை என்பவற்றை சேர்த்து, அல்வா பதம் வரும்வரை கிளற வேண்டும். தித்திப்பான அன்னாசிப்பழ அல்வா ரெடி.

Back to top button