ஏனையவை

கிராமத்து ஸ்டைலில் கூட்டாஞ்சோறு செய்வது எப்படி?

பொதுவாக அனைவருக்கும் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாஞ்சோறு செய்து சாப்பிடுவது என்றாலே பிடிக்கும். இந்த முறையில் தான் அனைவரும் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடின்றி ஒன்றாக சமைத்து சாப்பிட்டு மகிழ்வர்.

இருப்பினும், தற்போதைய சமூகத்தினருக்கு கூட்டாஞ்சோறு என்றாலே என்ன என்று தெரியாமல் இருகின்றது. ஆகவே அவர்களும் இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் மூலம் தெரிந்துக்கொள்ள முடியும்.

தேவையான பொருட்கள்
அரிசி – 200 கிராம்

துவரம்பருப்பு – 100 கிராம்

மஞ்சள்தூள், உப்பு – தேவையான அளவு

புளி – நெல்லிக்காய் அளவு

வாழைக்காய் – ஒன்று

கத்திரிக்காய் – 4

இளம் முருங்கைக்காய் – 1

அவரைக்காய் – 10

வெள்ளை முள்ளங்கி – ஒன்று

முங்கைக்கீரை – ஒரு கைப்பிடி

அளவு நெய், எண்ணெய் – தலா 2 டீஸ்பூன்

கடுகு – சிறிதளவு

வதக்க
நாட்டுத் தக்காளி – 3

நறுக்கிய சின்ன வெங்காயம் – அரை கப்

வறுத்து அரைக்க
தனியா – 2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 10

தேங்காய் – அரை மூடி

சின்ன வெங்காயம் – 4

நாட்டுத் தக்காளி – 1

செய்முறை
முதலில் அரிசியுடன், துவரம்பருப்பு, உப்பு, மஞ்சள்தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வறுத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை சிவக்க வறுத்து அரைத்துக்கொள்ளவும்.

பின் அதே பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தக்காளி, வெங்காயத்தை வதக்கி, காய்கள், முருங்கைக்கீரை, ளிக்கரைச்சல், உப்பு, மஞ்சள்தூள், அரிசி – பருப்பு கலவை சேர்க்கவும்.

இறுதியாக அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்.

நெய்யை காயவிட்டு, கடுகு தாளித்து, கூட்டாஞ்சோறில் சேர்த்து, சூடாகப் பரிமாறினால் சுவையான கூட்டாஞ்சோறு ரெடி!

Back to top button