உடல்நலம்

அடர்த்தியான நீண்ட கூந்தலுக்கு செம்பருத்தி பூ ஹேர் சீரம்: எப்படி தயாரிப்பது?

தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். அந்தவகையில் நீண்ட, ஆரோக்கியமான முடியை பராமரிக்க இயற்கையான பொருட்களின் பயன்படுத்த வேண்டும். தலைமுடி வளர்ச்சியை வேகமாக அதிகரிக்க உதவும் செம்பருத்தி பூ ஹேர் சீரம் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
செம்பருத்தி பூ – 3
துளசி – 10 இலை
ரோஜா இதழ் – 5
வெட்டிவேர் பொடி – ½ ஸ்பூன்
கற்றாழை ஜெல் – ½ ஸ்பூன்
வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் – 1

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பின் மிதமான தீயில் வைத்து அதில் செம்பருத்தி பூ, துளசி, ரோஜா இதழ் ஆகியவற்றைச் சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்த பின் அடுப்பை அணைத்துவிட்டு அதில் வெட்டிவேரை போட்டுவிட்டு மூடி வைக்கவும்.

10 நிமிடங்கள் கழித்து இதை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பின் இதில் கற்றாழை ஜெல் மற்றும் வைட்டமின் ஈ ஆயில் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

இதை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வைத்து, தலைக்கு குளித்த பிறகு இந்த சீரமை முடியில் ஸ்பிரே செய்து வர வேண்டும்.

Back to top button