ஆன்மிகம்

லக்ஷ்மி நாராயண யோகத்தால் அதிர்ஷ்டம் பெறவுள்ள இராசிக்காரர்கள்

வேத ஜோதிடத்திற்கமைவாக எதிர்வரும் 2024 பிப்ரவரி 12 முதல் 18 வரையிலான காலத்தில் சுக்கிர பகவான், புதன் பகவானின் சேர்க்கை, சூரியனின் பெயர்ச்சி உள்ளிட்ட கிரக பயிற்சிகள் நடக்கின்றன.

இதனால் ஐந்து இராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.

மேஷ ராசி
பெப்ரவரி இரண்டாம் வாரத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும், அதிகாரமும் அளிக்க கூடியதாக இருக்கும்.

உங்கள் வேலைகளை மற்றவர்களின் உதவியாள் செய்து முடிப்பீர்கள்.

உங்கள் தொழில், குடும்ப விஷயங்களிலும் எதிர்பார்த்து வெற்றியை பெறுவீர்கள்.

எந்த ஒரு முக்கிய முடிவு எடுக்கும் போது குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவை பெறுவீர்கள்.

நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருந்த வேலை வாய்ப்பு கிடைக்கும். தொலைந்த பொருள் கிடைக்கும்.

குழந்தைகள் தொடர்பாக சிலர் நல்ல செய்திகளை பெறலாம். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடக ராசி
கடக ராசியினருக்கு இந்த வாரத்தில் அதிர்ஷ்டம் சிறப்பாக கை கொடுக்கும்.

நீங்கள் திட்டமிட்டுள்ள பெரிய திட்டங்களை செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள்.

தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக மேற்கிலும் பயணங்கள் நல்ல வெற்றியையும், மனதில் இனிமையான உணர்வையும் தரும்.

உங்களுக்கு வரவேண்டிய பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது.

வெளிநாடு, வெளியூர் தொடர்பான தொழில் முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும்.

காதல் வாழ்க்கையில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் மனைவியுடன் நீண்ட பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது.

சிம்ம ராசி
சிம்ம ராசியினருக்கு இந்த வாரத்தில் அதிர்ஷ்டமானதாக அமையும்.

திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் மனதில் வித்தியாசமான தன்னம்பிக்கை காண்பீர்கள்.

உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும், குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் இணக்கமான சூழ்நிலை இருக்கும்.

நண்பர்கள், உறவினர்களுடன் இருக்கக்கூடிய தகராறுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப உறவு முன்னேற்றம் அடையும்.

விருச்சிக ராசி
விருச்சிக ராசி நேருக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்க கூடியதாக இருக்கும்.

இந்த வாரம் அதிர்ஷ்டத்தின் மூலம் ஆதரவை பெறுவீர்கள்.

இந்த வேலையை செய்தாலும் அதில் முன்னேற்றத்தை பெறலாம்.

வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும்.

காதல் விஷயத்தில் நெருக்கமும், ஆச்சரியமான பரிசும் பெறலாம்.

திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண வரன் அமையும்.

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். உங்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேற வாய்ப்புள்ளது.

கும்ப ராசி
கும்ப ராசியினருக்கு இந்த வாரம் நற்பலன்களை தரக்கூடியதாக இருக்கும்.

எல்லா வேலைகளும் சிறப்பாக செய்து முடித்து வெற்றியை அடையலாம்.

இந்த காலகட்டத்தில் உங்களுக்கு ஒரு வித்தியாசமான ஆற்றலை உணர்வீர்கள்.

தொழிலதிபர்களுக்கு இந்த வாரம் புதிய வாய்ப்புகளும், லாபமும் கிடைக்கக்கூடிய வாரமாக அமையும்.

உங்கள் கனவுகள் நினைவாகும். வியாபாரிகளுக்கு மிக சாதகமானதாக அமையும். புதிய நுகர்வோர்கள் கிடைப்பார்கள்.

கூட்டு தொழில் செய்யக் கூடியவர்கள், பங்குதாரர்களிடமிருந்து நிறைய உதவிகளை பெறலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமையும்.

Back to top button