இலங்கை
இன்று யாழில் இடம்பெற்ற கோர விபத்து (Photos)

யாழ்ப்பாணத்தில் உரும்பிராய் சந்தியில் இருந்து மருதனார்மடம் செல்லும் வீதியில் உரும்பிராய் சந்திரோதயா (ஞானபண்டிதர்) பாடசாலைக்கு அருகாமையில் இன்று (8) மாலை 03:00 மணியளவில் அதிவேகமாக பயணித்த டிப்பர் மற்றும் கன்ரர் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் சாரதிகள் படுகாயமடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டி மூலமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்துத் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாணைகளை மேற்கொண்டுள்ளனர்.

