தித்திப்பான சுவையில் தொதல் செய்வது எப்படி?
பாரம்பரிய தொதல் இலங்கையில் மிகவும் பிரபலமான சித்திரை புத்தாண்டு இனிப்பு வகையாகும். இந்த இருண்ட இனிப்பு முக்கியமாக தேங்காய் பால், வெல்லம் மற்றும் அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படும். இதை தயாரிப்பது கடினமான விடயம் இல்லை. ஆனால் நிறைய நேரம் செலவழித்து கிளற வேண்டும். ஆகவே வீட்டிலேயே எவ்வாறு சுவையான தொதல் செய்யலாம் என தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
வெள்ளை அரிசி மாவு – 350 கிராம், கெட்டியான தேங்காய் பால் – 3 லீற்றர், வெல்லம் – 900 கிராம், சர்க்கரை – 250 கிராம், அரைத்த ஏலக்காய் – 12, முந்திரி – 200 கிராம், உப்பு – 01 தேக்கரண்டி
செய்முறை
முதலில் முந்திரியை நறுக்கி, வெல்லத்தை அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். தேங்காய் பாலுடன் அரிசி மாவை கலந்து, வடிக்கட்டி மாவு கட்டிகளை அகற்றி எடுத்துக்கொள்ள வேண்டும். மீதமுள்ள தேங்காய் பாலுடன் வெல்லத்தை உருக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். உருக்கிய வெல்லத்துடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் கொதிக்க வைக்க வேண்டும். வெல்லம் கலவையில் அரிசி மாவு மற்றும் தேங்காய் பால் கலவையை சேர்த்து கலக்க வேண்டும். பின் அதனுடன் உப்பு சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க வைத்து கிளற வேண்டும். தோடோல் கெட்டியானதும், கடாயின் ஓரங்களில் ஒட்டாமல் வந்ததும் நறுக்கிய முந்திரியைச் சேர்க்கவும். இறுதியாக அடுப்பில் இருந்து இறக்கி, தட்டையான ஒரு தட்டில் சேர்த்து ஆறியதும் வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.