ஏனையவை

சூப்பாரான Chocolate Pan Cake செய்வது எப்படி?

பொதுவாகவே பேன் கேக்(Pan Cake) என்றால் அனைவரம் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒன்றாகவும் இருகின்றது எனலாம். மாலை நேரத்திலும் குழந்தைகளுக்கு ஸ்நாக் வைப்பதற்கும் இதை செய்யலாம்.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு- கால் கப்
நாட்டு சர்க்கரை – கால் கப்
கோகோபவுடர்- 3 ஸ்பூன்
பேக்கிங் சோடா- கால் ஸ்பூன்
பேக்கிங் பவுடர்-அரை ஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
வெண்ணிலா எசன்ஸ்- கால் டீஸ்பூன்
பால்- 100 கிராம்
முட்டை-1
சாக்லேட் சிரப் – ஒரு ஸ்பூன்

செய்முறை
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, நாட்டுசர்க்கரை, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து கலந்துக்கொள்ள வேண்டும்.

பின் ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டை, பால், வெண்ணிலா எசன்ஸ், சாக்லேட் சிரப் மற்றும் உப்பு சேர்த்து அடித்த கலந்துக்கொள்ளவும்.

இதை மா கலவையுடன் சேர்த்து, தோசை மா பதத்திற்கு கலந்துக்கொள்ளவும். விரும்பினால் சாக்லேட் சிப்ஸ் சேர்த்துக்கொள்ள முடியும்.

அடுத்து தோசை ஊற்றும் தட்டில் நெய் தடவி இந்த கலவையை தோசை போன்று ஊற்றி, 2 நிமிடத்தில் திருப்பி போட்டு எடுக்கவும்.

இறுதியாக சாக்லேட் சிரப் ஊற்றி பரிமாறினால் சுவையான சாக்லேட் பேன் கேக் ரெடி!

Back to top button