உடல்நலம்

ஆஸ்துமா, வயிற்றுப்போக்கை குணப்படுத்தும் சுவையான புதினா துவையல் செய்வது எப்படி?

புதினா இலையில் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன. புதினாவை தொடர்ந்து நம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோய், சளி, வயிற்றுப்போக்கு சரியாகும். சிறிது புதினா இலைகளை தினமும் வாயில் போட்டு நன்கு மென்று தின்றால் வாய் துர்நாற்றம் நீங்கும். இவ்வளவு மருத்துவ குணம் கொண்ட புதினாவை வைத்து ஒரு சூப்பரான துவையல் செய்யலாம் வாங்க..

தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப, உப்பு – தேவைக்கேற்ப, கடுகு – 1 தேக்கரண்டி, உளுத்தம்பருப்பு – 4 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் – 4, புளி – சிறிதளவு, கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, புதினா – 2 கட்டு

செய்முறை

புதினா இலைகளை நன்றாக சுத்தம் செய்து, தண்ணீர் வடிக்கட்டிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் உரித்து வைத்த பூண்டை சேர்த்து பொன்னிறமாக வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் உளுத்தம்பருப்பை போட்டு நன்றாக வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், காய்ந்த மிளகாய், புளி சேர்த்து 1 நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் பிறகு புதினாவை போட்டு நன்கு வாசம் போகும் வரை வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். வதக்கிய அனைத்து கலவையையும் நன்றாக ஆற வைத்து, ஒரு மிக்ஸியில் போட்டு விழுதாக அனைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதில் அரைத்து வைத்த கலவையை சேர்த்து இறக்கினால் சுவையான புதினா துவையல் ரெடி.

Back to top button