இலங்கை ஸ்டைலில் சூப்பரான மட்டன் கறி செய்வது எப்படி?
பொதுவாகவே சைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்களை விட அசைவ உணவை சாப்பிடுபவர்கள் இவ்வுலகில் அதிகம். ஒவ்வொரு நாட்டில் இருந்துக்கொண்டு வேறு நாட்டில் உள்ள உணவை சுவைக்க விரும்பும் உணவு பிரியர்களே அதிகம். அந்தவகையில் இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற மட்டன் கறி எப்படி செய்யவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஆட்டு இறைச்சி, தேங்காய் எண்ணெய், கருவேப்பிலை, எலுமிச்சை, கடுகு ,சீரகம், மிளகாய் தூள்/மசலா தூள், ரம்பை இலை, பூண்டு ,வெங்காயம், இஞ்சி, தக்காளி, கொத்தமல்லி, இலை ,பெருஞ்சீரகம், தண்ணீர்
செய்முறை
இறைச்சியைக் கழுவி, தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். பெரிய வெங்காயம் மற்றும் பூண்டு,இஞ்சி, தக்காளி என இவை அனைத்தையும் நறுக்கிக்கொள்ளவும். ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, ரம்பை, எலுமிச்சை புல், சிறிது பெருஞ்சீரகம், சில ஏலக்காய்கள், சில கிராம்பு மற்றும் சிறிது இலவங்கப்பட்டை சேர்க்கவும். பின்னர் தக்காளி, வறுத்த மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் குங்குமப்பூ தூள் சேர்க்கவும். இவை அனைத்தையும் நன்கு கிளறி சுமார் பத்து நிமிடங்கள் சமைக்கவும். இரண்டு அல்லது மூன்று கப் தண்ணீர் அல்லது பால் சேர்த்து அதனுடன் மட்டனும் சேர்த்து மூன்று மணித்தியாலம் கொதிக்க வைக்கவும். இறுதியான கொத்திமல்லி இலை சேர்த்து இறக்கினால் சூப்பரான இலங்கை ஸ்டைல் மட்டன் கறி ரெடி!