ஏனையவை
கோடை காலத்தில் குளிர்ச்சியான வெள்ளரிக்காய் மோர் செய்வது எப்படி?
தற்போது நிலவி வரும் காலநிலை மாற்றத்தால் வெயில் அதிகரித்து வருகின்றது. இதனால் உடம்பிற்கு பல அசௌகரியங்கள் ஏற்படும். இதற்கு என்ன வழிமுறைகள் எல்லாம் கைப்பிடிக்கலாம் என்று யாரும் அறியாத ஒன்றே. மேலும் வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் நல்லது என்று கூறுவார்கள். ஆகவே அதை எவ்வாறு வேறு விதமாக செய்து சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் – 2
மிளகு – 1/2 தே.கரண்டி
புதினா – சிறிதளவு
உப்பு – சிறிதளவு
ஐஸ்கட்டிகள் – தேவையான அளவு
மோர் – தேவையான அளவு
செய்முறை
வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
மிக்சியில் நறுக்கிய வெள்ளரிக்காய், மிளகு, உப்பு, ஐஸ்கட்டிகள், மோர் மற்றும் புதினா சேர்த்து அரைக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் சூப்பரான குளுகுளு வெள்ளரிக்காய் மோர் தயார்.