வீட்டிலேயே மணமணக்க சூப்பாரான பிரியாணி மசாலா செய்வது எப்படி?
பொதுவாகவே தென்னிந்திய உணவுகளை விரும்புவர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் ஒரே உணவு பிரியாணி தான். இந்த பிரியாணியையும் பல விதமான முறையில் வித்தியாசமான பொருட்களை வைத்து செய்வது வழக்கம். பெரும்பாலும் சிக்கன் பிரியாணி மற்றும் மட்டன் பிரியாணி தான் பிரபல்யமானது எனலாம்.
நாம் எவ்வளவு சுவையாக பிரியாணி செய்தாலும் ஒரு சில இடத்தில் தவறுவது வழக்கம். அதிலும் பிரியாணிக்கு சுவை கொடுப்பதே இந்த பிரியாணி மசாலா தான். இது இல்லை என்றால் பிரியாணியே இல்லை என்றும் கூறலாம். இந்த பிரியாணி மசாலாவானது கடைகளில் மட்டுடே வாங்கலாம் என்று நினைப்பது தவறு. முந்தைய காலங்களில் இந்த மசலாக்களை வீட்டிலேயே தயாரித்தனர். ஆகவே இதை எப்படி இலகுவான முறையிலும் மணக்க மணக்கவும் செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
நட்சத்திர பூ – 4
கொத்தமல்லி விதைகள் – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கருப்பு மிளகு – 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் – 1 டிஸ்பூன்
கிராம்பு – 15
பிரியாணி இலை – 6
பட்டை – 5
பச்சை ஏலக்காய் – 15
ஜாதிக்காய் – 3
காய்ந்த மிளகாய் – 7
இலவங்கப்பட்டை – 2
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின் அதை ஆற வைத்து ஒரு மிக்ஸியில் சேர்த்து பவுடர் போன்று அரைத்துக்கொள்ளவும்.
இவ்வாறு செய்தாலே கமகமக்கும் பிரியாணி மசாலா தயார்.
இதை மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி மற்றும் மீன் பிரியாணி என அனைத்து பிரியாணிலும் பயன்படுத்தலாம்.
மேலும் அரைத்த மசாலா தூளை காற்று புகாத கண்ட்டைநர் போட்டு, குளிர்சாதன பெட்டியில் மூன்று மாதங்களுக்கு சேமித்து வைக்கலாம்.