சுவையான சொக்லேட் புடிங் இலகுவான முறையில் செய்வது எப்படி?
பொதுவாக, சொக்லேட் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும். தினமும் சொக்லேடை வாங்கி சாப்பிடமால் அதை வைத்து வீட்டிலேயே எவ்வாறு சுவையானதொறு சொக்லேட் புட்டிங் செய்யலாம் என்று பார்க்கலாம்!!
தேவையான பொருட்கள்
பேக்கிங் கொக்கோ பவுடர் – ¼ கப்
சர்க்கரை – 6 தேக்கரண்டி
சோளமாவு – 2 தேக்கரண்டி
பால் – 1½ கப்
வெண்ணிலா எசன்ஸ் – ½ தேக்கரண்டி
துருவிய சாக்லேட் – தேவைக்கேற்ப
செய்முறை
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, பேக்கிங் கொக்கோ பவுடர் மற்றும் சோள மா ஆகியவற்றை கலக்க வேண்டும். பின்பு அதில் பாலை சிறிது சிறிதாக ஊற்றி கட்டியில்லாமல் நன்றாகக் கரைக்கவும். இந்தக் கலவையை அடுப்பில் வைத்து மிதமான தீயில் தொடர்ந்து கலக்கிக் கொண்டே இருக்கவும். கலவை கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி வெண்ணிலா எசன்ஸ் ஊற்றி கிளறவும். பின்னர் அதை கப்களில் ஊற்றி குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும். நன்றாகக் குளிர்ந்ததும் துருவிய சாக்லேட் மேலே தூவி பரிமாறவும். இவ்வாறு செய்தால் சுவையான கோடைக் காலத்தில் சாப்பிடக்கூடிய புடிங் தயார்!