ஏனையவை

நாவூறும் சுவையான தேங்காய் போளி செய்வது எப்படி?

என்னதான் விதவிதமான இனிப்புகள் இருந்தாலும், தேங்காய் போளி, பருப்பு போளி இரண்டும் மக்கள் விரும்பி சாப்பிடும் இனிப்புகளாகும். சரி வாங்க எப்படி சுவையான தேங்காய் போளி செய்யலாம் என்று பார்ப்போம் –

தேவையானப் பொருட்கள் :

மைதா மாவு – 4 கப் வெல்லம் பொடித்தது – 2 கப் தேங்காய்த் துருவல் – 2 கப் நல்லெண்ணெய் – 8 டீஸ்பூன் மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை சுக்குப்பொடி – 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன் நெய் – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை : முதலில் மைதா மாவுடன், சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள், நெய், நல்லெண்ணெய் சிறிது ஊற்றி நன்றாக பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிசைந்து எடுத்த மாவை அரை மணி நேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட்டு இறக்கி, அதை வடிகட்டிக்கொள்ள வேண்டும். வடிகட்டிய வெல்லப்பாகை மறுபடியும் அடுப்பில் வைத்து நன்றாக பாகு பதம் வரை நன்றாக கிளற வேண்டும். பின்னர், தேங்காய்த் துருவலைச் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அதில், சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக ஆற விட வேண்டும். பின்னர், அடுப்பில் தோசைக்கல்லை வைத்து வாழை இலையில் சிறிது நெய் தடவி, அதில் சிறிதளவு மாவை உருட்டி வைத்து, அதன் மேல் எலுமிச்சை பழம் அளவில் தேங்காய் பூரணத்தை வைத்து மூடி, மீண்டும் நெய் தடவி விரல்களால் வட்ட வடிவில் பூரி போல் தட்டிக்கொள்ள வேண்டும். அதை அடுப்பில் போட்டு, லேசான நெய் தடவி சுட்டு இறக்கினால் சுவையான தேங்காய் போளி ரெடி.

Back to top button