ஏனையவை

வீடே மணக்கும் சுவையான தேங்காய்ப்பால் டீ.., செய்வது எப்படி?

தேநீரின் சுவை பலரையும் அடிமையாக்கியுள்ளது. தேநீர் குடிப்பதனால் உடலை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. தினமும் சாதாரண பால் டீ குடிப்பதற்கு பதிலாக தேங்காய்ப்பாலில் டீ போட்டு குடித்தால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. அந்தவகையில், வித்யாசமான சுவை நிறைந்த தேங்காய்ப்பால் டீ எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பட்டை- 2 துண்டு
கிராம்பு- 5
ஏலக்காய்- 5
இஞ்சி- 1 துண்டு
தேங்காய்- 1 மூடி
டீ தூள்- 3 ஸ்பூன்
சர்க்கரை- 2 ஸ்பூன்

செய்முறை
முதலில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் இஞ்சி இவற்றை நன்கு இடித்து எடுத்துக்கொள்ளவும்.

பின் ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் டீ தூள் மற்றும் தட்டிவைத்த மசாலா பொருட்கள் சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்கவிடவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் 1 டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அரைத்து தேங்காய் பாலை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

டிக்காஷன் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அனைத்து அதில் எடுத்துவைத்த தேங்காய்ப்பால் சேர்த்து கலந்துகொள்ளவும்.

பின் ஒரு டம்ளரில் வடிகட்டி குடிக்கலாம். சுவையான தேங்காய்ப்பால் டீ தயார்.

Back to top button