தீபாவளி ஸ்பெஷலாக மொறு மொறு முறுக்கு செய்வது எப்படி?
அனைவருக்கும் பொதுவாகவே மிகவம் பிடித்த ஒரு ஸ்நாகாக இருப்பது முறுக்கு தான். அதிலும் பண்டிகை காலம் என்றால் முறுக்கு இல்லாம் வேறு எந்த பண்டமும் முழுமையடையாது. வருகிற நாட்கள் எல்லாம் பண்டிகை வருகிறது. இன்று இரண்டு கிழமைகளில் தீபாவளியும் வருகின்றது. அதற்கு வீட்டில் இலவாக இந்த முறுக்கை செய்யலாம். நாவில் எச்சில் ஊற வைக்கும் அளவிற்கு எப்படி மொறு மொறு முறுக்கு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் – உளுத்தம் பருப்பு மா – 3 தே.கரண்டி, அரிசி மா – 1 கப், பெருங்காயம் – 1/4 தே.கரண்டி, சிவப்பு மிளகாய் – 1/4 தே.கரண்டி, உப்பு – 1/4 தே.கரண்டி, எள் – 1 ஓம விதை – 1/4 தே.கரண்டி, நெய் – 2 தே.கரண்டி, தண்ணீர் – 10 மிலிஎண்ணெய்
செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் உளுந்து சேர்த்து சரித்துக்கொள்ளவும். அதனுடன் சிவப்பு மிளகாய், பெருங்காயம், உப்பு, எள், ஓம விதைகள் மற்றும் நெய் சேர்க்கவும். பின் தண்ணீர் ஊற்றி இந்த கலவையை பிசைந்துக்கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி முறுக்கி அச்சியில் வைத்து பிழிந்து பொண்ணிறமாகும் வரை பொறித்தெடுக்கவும்.