வீடே நெய் மணக்க மணக்க எப்படி மைசூர்பாகு செய்யலாம்?
பொதுவாகவே வீட்டில் நடக்கும் விஷேடமான சந்தர்ப்பங்களில் நாம் இனிப்பு வகையை தான் அதிகமாக சாப்பிடுவோம். அதிலும் இந்தியாவில் பிரபல்யமான மைசூர்பாகிற்கு தான் சுவை அதிகம். அதற்காக தினமும் கடைக்கு செல்ல வேண்டிய அவசியமும் தேவையில்லை. ஆகவே வீட்டில் இருந்தப்படியே எப்படி சுவையான இனிப்பான மைசூர்பாகு செய்யலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
1 கப் கடலை மா, 2 கப் சீனி, 2 கப் நெய், 1 கப் தண்ணீர்
செய்முறை – முதலில் ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடாக்கவும். பின் சீனியை தண்ணீர் சேர்த்து காய்ச்ச வேண்டும். அடுத்ததாக சீனி பாகுவுடன் கடலை மாவை சிறிது சிறிதாக சேர்ந்து கலந்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனுள் சூடாக இருக்கும் நெய்யில் ஒரு கரண்டி அளவு விட்டுக் கிளறவும். இப்படி இடைவெளி விட்டு ஒவ்வொரு கரண்டியாக நெய்யை முழுவதும் தீர்ந்து போகும்வரை விட்டு கிளறவும். நெய்யும் மாவும் பிரிந்து வராமல் இருக்கும் வரை கலக்க வேண்டும். இறுதியாக ஒரு தட்டில் நெய் தடவி, அதில் அந்த கலவையை சேர்த்து பின் சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்.