ஏனையவை

சத்தான மொறு மொறு ராகி முறுக்கு செய்வது எப்படி?

அனைவருக்கும் பொதுவாகவே மிகவம் பிடித்த ஒரு ஸ்நாகாக இருப்பது முறுக்கு தான். அதிலும் பண்டிகை காலம் என்றால் அனைவரின் இல்லத்திலும் முறுக்கு இல்லாமல் இருக்காது. முறுக்கிலேயே கொஞ்சம் வித்யாசமாக இந்த சத்தான ராகி முறுக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலை- 1/4 கப்
சீரகம்- 1 ஸ்பூன்
மிளகு-1/2 ஸ்பூன்
பூண்டு- 4 கப்
பச்சைமிளகாய்- 2
கருவேப்பிலை- சிறிதளவு
ராகி மாவு- 1 கப்
பச்சரிசி மாவு- 1/2 கப்
பெருங்காயம்- 1 சிட்டிகை
உப்பு- தேவையான அளவு
சூடான எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை
முதலில் ஒரு வாணலில் பொட்டுக்கடலையை மிதமான தீயில் வைத்து வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து வேறொரு மிக்ஸி ஜாரில் சீரகம், மிளகு, பூண்டு, கருவேப்பிலை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும்.

வேறொரு பாத்திரத்தில் ராகிமாவு, பச்சரிசி மாவு, பெருங்காயம், தேவையான அளவு உப்பு, அரைத்து வைத்த பொட்டுக்கடலை மாவு மற்றும் அரைத்து விழுது, 1 ஸ்பூன் சூடான எண்ணெய் சேர்த்து பிணைத்து வைத்துகொள்ளவும்.

அடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து எண்ணெயை நன்கு சூடேற்றவும்.

பின் மாவு பிழியும் குழாயில் மாவை சேர்த்து எண்ணெயில் முறுக்கு பிழிந்த வெந்தவுடன் எடுத்தல் தீபாவளி ஸ்பெஷல் சுவையான மற்றும் ஆரோக்கியமான ராகி முறுக்கு தயார்.

Back to top button