உடல்நலம்

உடல் பருமன் குறைய உதவும் ஓட்ஸ் கொழுக்கட்டை செய்வது எப்படி?

பொதுவாகவே அனைவருக்கும் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள மிகுந்த ஆசை இருக்கும். அதற்காக ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வதும் வழக்கம். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுக்கும் போது கட்டாயமாக ஓட்ஸ் எடுப்பதும் வழக்கம். ஆனால் ஓட்ஸில் ஒரு சுவையும் இருக்காது. விருப்பமில்லாமலும் பலர் சாப்பிடுவார்கள். இது உடல் எடையை குறைப்பதற்கு அதிகமாக உதவும். எனவே ஓட்ஸ் வைத்து எப்படி சுவையான கொழுக்கட்டை செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
ஓட்ஸ்
ரவை
வெங்காயம்
பச்சை மிளகாய்
கேரட்
தேங்காய்
கறிவேப்பிலை
பாசிப் பருப்பு
தேங்காய்
உப்பு
கடுகு
உளுத்தம்
பருப்பு

செய்முறை
ஒரு கடாயில் பாசிப் பருப்பு, ஓட்ஸ் மற்றும் ரவை சேர்த்து வறுக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, கடுகு மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் வறுத்து வைத்த ஓட்ஸை சேர்க்கலாம்.
பிறகு கேரட், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
அடுத்து துருவிய தேங்காய் சேர்த்து கைகளில் கொழுக்கட்டையை பிடிக்கவும்.
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டையை வைத்து எடுத்தால் சீக்கிரமாக வெந்துவிடும்.
மேலும் காலை வேளையிலும் மாலையிலும் ஆரோக்கியமாக சாப்பிடலாம்.

Back to top button