ஏனையவை

பாலப்பம் தேங்காய் இல்லாமல் செய்வது எப்படி ? இந்த இரண்டு பொருள் மட்டும் போதுமானது

பொதுவாகவெ அனைவரும் அப்பம் என்பதை விரும்பி சாப்பிடுவார்கள். இது கேரள உணவு வகைகளில் பிரபலமான காலை உணவாகும். மேலும் இது ஆப்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இதை குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி எப்படி இலகுவான செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 2 வெள்ளை அரிசி 1 கப் வெள்ளை அவல் 2 முதல் 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை 1/2 தேக்கரண்டி உப்பு 1/2 டேபிள் ஸ்பூன் இன்ஸ்டன்ட் ஈஸ்ட் 2 முதல் 21/2 கப் தண்ணீர்

செய்முறை – முதலில் ஒரு பாத்திரத்தில் வெள்ளை அரிசி சேர்த்து அதை 4 கப் வெதுவெதுப்பான நீரில் 4 முதல் 5 மணி நேரம் ஊற வைக்கவும். பின் தண்ணீரை வடித்தெடுத்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். 1 கப் வெள்ளை அவல் , 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை, 1/2 தேக்கரண்டி உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் ஈஸ்ட் ஆகியவற்றைச் சேர்க்கவும். அடுத்து அதில் 21/2 கப் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக அரைக்கவும். பின் தோசை மாவுடன் ஒப்பிடும்போது மாவு மெல்லிய நிலைத்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்யவும். கிண்ணத்தை மூடி, 4 முதல் 8 மணி நேரம் புளிக்க விடவும். பின் ஆப்பம் செய்யும் பாத்திரத்தில் ஒரு கரண்டி மாவு ஊற்றி சுழற்சி 2 நிமிடங்களுக்கு சமைத்து அப்பத்தை எடுக்கவும். இறுதியாக தேங்காய் பால் இருந்தால் அதனுடன் பரிமாறலாம்.

Back to top button