ஏனையவை

பன்னீர் மசாலா தோசை ஹொட்டல் சுவையில் செய்வது எப்படி?

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சத்துக்களை அதிகம் கொண்ட பன்னீர் அனைவருக்கும் பிடித்தமான உணவாக இருந்து வருகின்றார். தற்போது ஹொட்டல் ஷ்டைல் பன்னீர் மசாலா தோசை எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

தோசைமாவு – தேவையான அளவு

பன்னீர் – 2 கப்

குடை மிளகாய், வெங்காயம், தக்காளி, ப.மிளகாய் – தலா 1

மஞ்சள்தூள் – 1/2 டீ ஸ்பூன்

சீரகத்தூள், கரம் மசாலா, மிளகாய் தூள் – தலா 1 டீ ஸ்பூன்

பட்டர், நெய், உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லித்தழை, புதினா – சிறிதளவு

செய்முறை

முதலில் பன்னீரை நன்றாக துருவிக்கொள்ளவும். பின்பு குடைமிளகாய், தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி இவற்றினை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு அடுப்பில் கடாயை வைத்து பட்டர் சேர்த்து பின்பு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் இவற்றினை சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து இதனுடன், சீரகத்தூள், மஞ்சள், கரம் மசாலா தூளைப் போட்டு நன்கு வதக்கியதும், அதில் துருவிய பன்னீரை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து இறுதியில், கொத்தமல்லி, புதினா தழைகளை சேர்த்து இறக்கவும். பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தோசை ஊற்றி, அதன் மேல் நெய் சேர்த்து நன்றாக மொறு மொறுமாகும் வரை வேகவிட்டு, தோசையின் மீது பன்னீர் மசாலாவை சேர்த்து, அதன் மேல் சிறிது பட்டர் சேர்த்துக்கொள்ளவும். இறுதியில் தோசை வெந்ததும், எடுத்து சாப்பிட ஆரம்பிக்கலாம்.

Back to top button