உடல்நலம்

சளி, இருமலை விரட்டும் செலவு ரசம் செய்வது எப்படி?

குளிர் காலத்தில் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை என்றால் அது சளி தொல்லையாக தான் நிச்சயம் இருக்கும். ஆனால் தற்போது வெயிற்காலத்திலும் சளி இருமல் போன்ற பிரச்சினைகள் வருகின்றது. சளி இருமல், தொண்டை வலி, தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கு என்ன செய்யலாம் என பலரும் யோசித்துக் கொண்டு இருப்பீர்கள். அதற்கு எல்லாம் தீர்வு தரக்கூடியது தான் இந்த செலவு ரசம். இதை எப்படி இலகுவான முறையில் செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
அரைக்க
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1
மஞ்சள் தூள் – சிறிதளவு
அசுர வேகத்தில் முடி வளர இதை செய்தால் போதும்…!
அசுர வேகத்தில் முடி வளர இதை செய்தால் போதும்…!
மல்லி விதை – 1 டேபிள் ஸ்பூன்
நாட்டுத்தக்காளி – 2 பெரியது
பூண்டு – 5
சின்ன வெங்காயம் – 5
கருவேப்பிலை – 1கொத்து

சமைப்பதற்கு
காய்ந்த மிளகாய் – 1
கொத்தமல்லி தழை – சிறிதளவு
நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
உப்பு – சிறிதளவு

செய்முறை
முதலில் ஒரு மிக்ஸியில் அரைப்பதற்காக இருக்கும் பொருட்களை சேர்த்து அரைக்கவும்.

பின் ஒரு பாத்திரத்தில் சத்திற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதில் உப்பு மற்றும் கொத்தமல்லியும் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

ரசத்தை தாளிக்க ஒரு சிறிய பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு , கருவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து கிளறவும்.

இறுதியாக ரசம் பொங்கி வரும் போது இதை சேர்த்து சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

Back to top button