ஏனையவை
மெதுவான பஞ்சு இனிப்பு போண்டா செய்வது எப்படி?
அனைவருக்கும் பிடித்தமான சுவையான பஞ்சு இனிப்பு போண்டா செய்வது எப்படி என்று பார்ப்போம்
தேவையான பொருட்கள்
பால் – ஒரு கப்
வெண்ணெய் – அரை கப் (100 கிராம்)
மைதா – ஒரு கப் (125 கிராம்)
சர்க்கரை – தேவையான அளவு
ஸ்பூன் உப்பு – ஒரு சிட்டிகை
முட்டை – 6
சோள மாவு – 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை
- பாத்திரத்தில் ஒரு கப் பால் சேர்த்து, அதில் அரை கப் வெண்ணெய் சேர்த்து பாலை நன்றாக கொதிக்க விட வேண்டும்.
- பின்னர், அதில் மைதா, சர்க்கரை, உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு கிளற வேண்டும். பின்னர் மாவு பதத்திற்கு வந்த பிறகு அதை மற்றொரு கிண்ணத்தில் மாற்றி ஆற விட வேண்டும்.
- ஆறிய மாவில் 4 முட்டையை ஒன்று ஒன்றாக சேர்த்து கிளற வேண்டும். மாவு சூடாக இருக்கும்போது முட்டையை போட கூடாது. அப்படி போட்டால் முட்டை வெந்துவிடும். அதனால் ஆறிய பிறகு முட்டை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
- ஒரு பைப்பிங் கவரில் இந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக தட்டில் விட வேண்டும்.
- இதை வேக வைக்க அவென்யூவில் 200 செல்சிய்ஸில் 25 நிமிடங்கள் வைக்க வேண்டும்.
- பின்னர் ஒரு பாத்திரத்தில் 2 முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து, கூட 6 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி, அதில் 3 டேபிள் ஸ்பூன் சோள மாவு சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இதில் லேசாக சூடுபடுத்தின ஒன்றரை கப் பாலை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
- கொதித்து கெட்டியான பின்னர், வெண்ணிலா செசன்ஸ், 2 டேபிள் ஸ்பூன் பட்டர் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
- பின்னர், கெட்டியாக வந்த கலவையை ஒரு கவரில் இட்டு அந்த பஞ்சு போண்டா உள்ளே ஒரு ஓட்டை போட்டு அதில், இந்த கலவையை சேர்க்க வேண்டும்.
- சூப்பரான பஞ்சு இனிப்பு போண்டா ரெடி