ஏனையவை

இலங்கைர்களுக்கு மிகவும் பிடித்தமான சீனி சம்பல் செய்வது எப்படி?

இலங்கையில் உள்ளவர்கள் இந்த சீனி சம்பல் உணவை அடிக்கடி செய்து சாப்பிடுவார்கள். இது இனிப்பு, காரத்தன்மை மற்றும் புளிப்பு சுவையோடு இருக்கும். இது மிகவும் எளிமையானது. இதை பொரும்பாலும் ரொட்டியுடன் வைத்து சாப்பிட தான் விரும்புவார்கள். இதை ருசி பார்ப்பதற்கு இலங்கைக்கு தான் வர வேண்டும் இல்லை. நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்துக்கொண்டே இதை செய்யலாம். இதை எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவின் ஊடாக தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்

நறுக்கிய வெங்காயம் – 350 கிராம்

சிவப்பு மிளகாய்த் துண்டுகள் – 1 ¼ தேக்கரண்டி

புளி சாறு – 100 மிலி

சர்க்கரை – 1 ¼ தேக்கரண்டி

சமையல் எண்ணெய் – 4 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

செய்முறை

வெங்காயத்தை சிறிது சிறிதாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். சிவப்பு மிளகாய்த் துண்டுகள், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து கலந்து எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து உப்பு கலந்த வெங்காயத்தை 3 அல்லது 4 நிமிடம் குறைந்த தீயில் வதக்கவும். பின்னர், சமையல் எண்ணெயைச் சேர்த்து, கலந்து மீண்டும் 4 முதல் 5 நிமிடங்கள் மிதமான தீயில் மூடி வைக்கவும். இறுதியாக, புளி சாறு, சர்க்கரை மற்றும் சிவப்பு மிளகாய்த் துண்டுகள் சேர்த்து, 2 முதல் 3 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து சமைத்த எடுக்க வேண்டும்.

Back to top button