ஏனையவை
இலங்கையின் பிரபலமான பொல் ரொட்டி (Sri Lankan Pol Roti) செய்வது எப்படி?

நம்முடைய குழந்தைகளுக்கு தினமும் இட்லி, தோசை போன்ற உணவுகளை கொடுக்காமல் இந்த மாதிரியான உணவுகளை கொடுக்கலாம்.
இலங்கை பொல் ரொட்டி எப்படி செய்வது என பார்க்கலாம். இது வழக்கமான ரொட்டியை விட வித்தியாசமான சுவையில் இருக்கும்.
தேவையான பொருள்கள்
2 கப் மைதா
2-3 நறுக்கிய பச்சை மிளகாய்
1 கப் துருவிய தேங்காய்
1 நறுக்கிய வெங்காயம்
ஒரு கைப்பிடி கறிவேப்பிலை
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
இலங்கை போல் ரொட்டி / srilankan pol rotti
செய்முறை
- முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு ஆகியவை சேர்த்து கலக்க வேண்டும்.
- அதனுடன் மைதா மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து, மாவு பதத்திற்கு பிசைந்து 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
- பின்பி, கைகளில் எண்ணெய் தடவி மாவை சம பாகங்கள் உள்ள உருண்டைகளாக பிரிக்க வேண்டும்.
- ஒவ்வொரு உருண்டையாக எடுத்து விரல்களால் மெதுவாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- தவாவை குறைந்த மிதமான தீயில் சூடாக்கி, அதன் மீது தட்டி வைத்துள்ள மாவை வைக்க வேண்டும்
- இரண்டு புறமும் அதனை திருப்பி போட்டு, பொன்னிறமாகவும், மிருதுவாகவும் வரும் வரை சமைக்க வேண்டும். அதன் மேல் நெய் கூட தடவலாம்
- இப்போது சுவையான இலங்கை போல் ரொட்டி தயார். இதனுடன் குருமா அல்லது சன்னா மசாலா வைத்து சாப்பிடலாம்.