இலங்கை ஸ்டைலில் வாயில் வைத்ததும் கரையக்கூடிய வட்டலப்பம் செய்வது எப்படி?
வத்தலப்பம் என்பது தேங்காய் பால்வெல்லம், முந்திரி பருப்பு, முட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் ஜாதிக்காய் உள்ளிட்ட பல்வேறு மசாலாப் பொருட்களாலும் செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகையாகும்.
இது இலங்கையில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு வகையாகும். இதை வேண்டாம் என்று கூறாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
ஆகவே வாயில் வைத்ததும் கரையக்கூடிய இந்த இனிப்பை எப்படி வீட்டிலேயே செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
450 கிராம் – வெல்லம்
8 – பெரிய முட்டை
1 1/2 கப் – தேங்காய் பால்
ஜாதிக்காய் சிட்டிகை
நறுக்கிய முந்திரி பருப்பு
2 டீஸ்பூன் – வெண்ணிலா எசன்ஸ்
செய்முறை
முதலில் முட்டையை அடித்து பாலுடன் நன்கு கலக்கவும்.
அடுத்து வெல்லத்தை உருக்கிக்கொள்ளவும்.
உருக்கிய வெல்லத்துடன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து, கிளறவும்.
இந்த கலவையில் சிறிதளவு ஜாதிக்காய் சேர்த்து மீண்டும் கிளற வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்திற்கு மாற்றி 1 மணி நேரம் ஆவியில் வேகவைக்கவும்.
இறுதியாக முந்திரி பருப்பு தூவி எடுத்தால் வட்டலாம் தயார்!